மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் -ராமன் சிங்!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராவார் என்று சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங் தெரிவித்திருந்தார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராவார் என்று சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங் தெரிவித்திருந்தார்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 23-ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தலுக்கான முடிவுகள் வெளிவரும். எனினும் தேர்தல் இறுதி வாக்குப்பதிவான மே 19-ஆம் நாள் வெளியான தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகள் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்து வருகின்றன.
இந்நிலயில் இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலுவிழக்கும், மோடி மீண்டும் பிரதமராவார் என்று சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று ( மே 20) சுவாமி தரிசனம் செய்தார். அவரை மாவட்ட பா.ஜ தலைவர் முரளீதரன் வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டிற்கு சென்று கலாமின் அண்ணன் முத்துமீரா மரைக்காயர், பேரன் சேக் சலீம் ஆகியோரை சந்தித்தார். பின் செய்தியாளர்களிடன் ராமன் சிங் பேசுகையில்., சத்தீஸ்கர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் அப்துல் கலாம். கலாம் இங்கு இல்லையென்றாலும் அவரது உறவினர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் வந்துள்ளன.
பொதுவாக கருத்து கணிப்பு தங்களுக்கு சாதமாக இருந்தால் மட்டுமே எதிர்கட்சிகள் ஏற்பர். அவர்களால் பா.ஜ.கவின் வெற்றியை தடுக்க முடியாது. சத்தீஸ்கரில் நக்சலைட் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டு வரும் நிலையில் இனி வரும் காலத்தில் முழுவதுமாக ஒடுக்கப்படும் என தெரிவித்தார்.