பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியை வழியனுப்பி வைக்க மூத்த அதிகாரிகள் விமான நிலையம் வரை சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று மாலை பிரதமர் மோடி ஜெர்மனிக்கு சென்றடைந்தார். ஜெர்மன் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நேற்று இரவு உணவு விருந்து அளித்தார். அதன்பிறகு இரு தலைவர்களும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நல்ல முறையில் அமைந்திருந்ததாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் விவரித்துள்ளார். 


 



 


பிரதமர் மோடி- ஏஞ்சலே மெர்க்கல் இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு இன்று நடைபெறுகிறது. அப்போது பரஸ்பரம் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, புதுமை கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பம், திறன்மேம்பாடு, நகரப்புற கட்டமைப்பு, ரெயில்வே, சிவில் விமான போக்குவரத்து, பசுமை எரிசக்தி, வளர்ச்சிப்பணிகளில் ஒத்துழைத்து செயல்படுதல் தொடர்பாக அவர்கள் விவாதிக்க உள்ளனர்.


 



 


இரு தரப்பிலும் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை ஸ்பெயின் புறப்பட்டு செல்வார்.