அர்ஜென்டினாவில் நடைப்பெற்று வரும் G-20 உச்சி மாநாட்டில் பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவான ஒன்பது புள்ளி திட்டங்களை பிரதமர் மோடி முன்வைதுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அர்ஜென்டினா நாட்டின் தலைநகரமான பியுனோஸ் அயர்ஸ் நகரில் ‘G-20’ என்று அழைக்கப்படுகிற உலகின் மிகப்பெரிய பொருளாதார அமைப்பின் உச்சி மாநாடு நேற்று துவங்கியது.



இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


இம்மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


முன்னதாக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினர். பாதுகாப்பு, பொருளாதாரம், முதலீடு, விவசாயம், எரிசக்தி, கலாசாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும், ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாக தெரிகிறது. இந்தியாவில் பெருகி வரும் எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் தேவையை சந்திப்பதற்கு ஏற்ற வகையில், அவற்றை வினியோகம் செய்வதற்கு சவுதி அரேபியா முன் வந்துள்ளது என சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.


இதனைத்தொடர்ந்த உள்ளூர் நேரப்படி வெள்ளி அன்று நடைப்பெற்ற G-20 உச்சி மாநாட்டில் பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவான ஒன்பது புள்ளி திட்டங்களை பிரதமர் மோடி முன்வைதுள்ளார். இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு (MEA) செய்திதொடர்பாளர் ரவீஷ் குமார் தகவல்களை வெளியிட்டுள்ளார்.


திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி G-20 நாடுகளுக்கு இடையில் "வலுவான மற்றும் தீவிரமான" ஒத்துழைப்பை வேண்டும் என பரிந்துரைத்தார். குற்றம் சார்ந்த வருவாயில் திறமையான முடக்கம், குற்றவாளிகளுக்கு முன்கூட்டியே திரும்புவது மற்றும் குற்றம் சார்ந்த வருவாயை திறமையான முறையில் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றை முன்வைத்தார். "சட்டபூர்வமான செயல்முறைகளில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காட்டினார்.