ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை உறுதி செய்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகாரைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கேரளாவைச் சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை ஒன்றாக பதிவாகியுள்ளது. ஜூலை 11 வரை, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 800 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


மேலும் படிக்க | Monkeypox virus: குரங்கு காய்ச்சலை Pandemic என்று குறிப்பிட்ட WHN


பாதிக்கப்பட்ட நாடுகள்


உலகளவில் கேமரூன், மத்திய ஆபிரிக்க குடியரசு, கோட் டி ஐவரி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, காபோன், லைபீரியா, நைஜீரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, கனடா, ஆஸ்திரியா, இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 57 நாடுகளில் 8,200-க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


உலக சுகாதார மையம் ஏற்கனவே குரங்கு அம்மை குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசும், கேரளாவில் குரங்கு அம்மை பதிவாகியிருப்பதையொட்டி அனைத்து மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. குரங்கில் இருந்து பரவியிருக்கும் இந்த வைரஸ், பெரியம்மை போன்ற அதே வைரஸ் குடும்பத்தில் இருந்து வருகிறது. poxviridae குடும்பத்தில் உள்ள orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது.


குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது?


பாதிக்கப்பட்டவரின் காயங்கள், உடல் திரவங்கள், மூச்சு மற்றும் படுக்கை போன்ற அசுத்தமான பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் நபரால் குரங்கு அம்மை (monkeypox) வைரஸ் பரவுகிறது. 


முதன்முறையாக எப்போது வந்தது?


குரங்கு அம்மை நோய் மனிதர்களிடம் முதன்முதலில் 1970 ஆம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் கண்டறியப்பட்டது. அங்கு பெரியம்மை 1968 ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்ட பிறகு குரங்கு அம்மை பரவத் தொடங்கியது. கிராமங்கள், மலைப்பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.


மேலும் படிக்க | ஆப்பிரிக்காவை இழிவுபடுத்தும் இனவெறி மற்றும் பாரபட்சமான பெயரா Monkeypox: பின்னணி


தடுப்பூசிகள் இருக்கிறதா?


குரங்கு அம்மை நோய்க்கு எதிராக எதிராக செயல்படும் இரண்டு தடுப்பூசிகள் தங்களிடம் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை வெளிப்படுவதற்கு முன்பும், அறிகுறிகள் தொடங்குவதற்கு முன்பும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டால் சிறப்பாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ