முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இடையில் மேலும் அரை அதிவேக தேஜாஸ் போன்ற ரயில்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தற்போது டெல்லி மற்றும் லக்னோ இடையே இயங்கும் முழு தானியங்கி அம்சங்களுடன் இந்தியாவின் முதல் ரயில் ஆகும். இதனைத்தொடர்ந்து  அகமதாபாத் மற்றும் மும்பை இடையேயான அதிவேக ரயில்களையும் நிதியமைச்சர் அறிவித்தார்.


27,000 கி.மீ தடங்களை மின்மயமாக்கத் தொடங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களையும் சீதாராமன் அறிவித்தார்.


ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் ரயில் தடங்களுடன் ஒரு பெரிய சூரிய ஆற்றல் திறன் கொண்ட அமைப்பையும் அவர் அறிவித்தார். மேலும் பல ரயில் நிலையங்களை நவீனமயமாக்கவும், மறுவடிவமைக்கவும் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்க தேஜாஸ் போன்ற ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் பெங்களூரு புறநகர் ரயில் தேவையான ஊக்கத்தை வழங்கும் என்று அவர் கூறினார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "துறைமுகங்களுக்கான நிர்வாக கட்டமைப்பை அமைப்பது,  ஒரு பெரிய துறைமுகம் மற்றும் பங்குச் சந்தைகளில் அதன் பட்டியலையும் பார்க்கும். பெங்களூரு புறநகர் போக்குவரத்து திட்டத்திற்கு அரசாங்கம் 20% பங்குகளை வழங்கும். இது ரூ.18,600 கோடி திட்டமாக இருக்கும். ஒதுக்கீடு டிராஸ்போர்ட் உள்கட்டமைப்பிற்காக ரூ.1.7 லட்சம் கோடி நிதியாண்டில் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


அழிந்துபோகக்கூடிய பொருட்களை நகர்த்துவதற்காக இந்திய ரயில்வே கிசான் ரெயிலை அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "அழிந்துபோகக் கூடியவற்றுக்கான தடையற்ற தேசிய குளிர் விநியோக சங்கிலியை உருவாக்க, இந்திய ரயில்வே PPP மாதிரி மூலம் கிசான் ரெயிலை அமைக்கும், இதனால் அழிந்துபோகக்கூடிய பொருட்களை விரைவாக கொண்டு செல்ல முடியும்." எனவும் குறிப்பிட்டுள்ளார்.