அஸ்ஸாமில் 22 மாவட்டங்களில் வெள்ளம்... 16 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு..!!!
அஸ்ஸாமின் 22 மாவட்டங்களில், பலத்த மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால், 16 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அஸ்ஸாமில் 22 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் 16 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த வெள்ளத்தினால், இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
அசாமின் (Assam) 22 மாவட்டங்களில் உள்ள 16 லட்சத்தி 3 ஆயிரத்து 255 மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 162 நிவாரண முகாம்களில் 12,597 பேர் தங்கியுள்ளதாகவும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Assam State Disaster Management Authority) கூறியுள்ளது.
ALSO READ | இந்தியா-சீனா எல்லை பிரச்சனை; லடாக் சென்ற பிரதமர் மோடி; உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்
டிஸ்பூர் (Dispur): அஸ்ஸாமின் 22 மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக 16 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3, 2020) தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை மட்டியா மாவட்டத்தில் ஒருவர் இறந்ததாக பதிவாகியுள்ளது. தற்போது, இறப்பு எண்ணிக்கை 34 ஆக உள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வநாத், தர்ராங், நல்பாரி, பார்பேட்டா ஆகியவை அடங்கும்.
இந்தியா-சீனா எல்லை பிரச்சனை; லடாக் சென்ற பிரதமர் மோடி; உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்
இதற்கிடையில், உள்ளூர்வாசிகள் அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர். தங்கள் பகுதியை ஆய்வு செய்ய அரசாங்கத்திலிருந்து எந்த அதிகாரியும் வரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாநில அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
ALSO READ | Big Breaking: நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்
பலத்த மழை மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. திப்ருகர் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும், பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) திங்களன்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் உள்ள திப்ருகர் (Dibrugarh) மாவட்டத்தின் கலகோவா (Kalakhowa) பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள், அதிக மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோன்ற சூழ்நிலை டின்சுகியா (Tinsukia ) மாவட்ட கிராம மக்களும் எதிர்கொண்டுள்ளனர். இதற்கிடையில், குய்ஜான் (Guijan ) பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
ஜூன் 28 ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), பலத்த மழையின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருதல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை தொடர்பான நிலையை மறுஆய்வு செய்தார்.