எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த சரத் பவாருக்கு பெருத்த பின்னடைவை தரும் வகையில், அவரது கட்சியான தேசியவாத காங்கிரசின் 40 MLAக்கள் மகாராஷ்டிராவில், ஆளும் பாஜக - ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதன் மூலம் சரத்பவாரின் தேசியவாத கட்சி இரண்டாக உடைந்து அதன் பெரும்பாலான MLAக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பவாரின் முயற்சியின் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியாக தேசியவாத காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் 30 பேர் அஜித் பவார் தலைமையில் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவளித்த நிலையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். பாஜகவுடன் இணைந்த அஜித பவார், அதோடு நிற்காமல், கட்சியையும் கைப்பற்ற திட்டமிடுகிறார். அது குறித்து அஜித் பவார் கூறூகையில், தேசியவாத காங்கிரஸ் பெயரிலேயே தேர்தலில் போட்டியிடுவோம். தேவைப்பட்டால், சின்னம், பெயருக்காக போராட தயாராக உள்ளோம் எனக் கூறினார்.


கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், தேர்தல் முடிவுக்கு பின் எதிர்பாராத விதமாக சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. 2019 நவம்பர் 27-ம் தேதி  புதிய முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். ஒன்றரை ஆண்டுகளாக உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் 2022 ஜூன் மாதம் திடீரென சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக திரும்பினார்.


உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்று சிவசேனா தலைமையிலான அரசு ஆட்சியமைத்ததில் இருந்தே அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் தொடர்ந்து வந்தது. உத்தவ் தாக்கரேவை கவிழ்க்க அவரது அக்கட்சியின் மூத்த ஏக்நாத் ஷிண்டேவையே வளைத்தது பாஜக பாஜக ஆதரவுடன் சிவசேனா ஆட்சியை பிடிக்க ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.


மேலும் படிக்க | டீஸ்டா செடல்வாட்டுக்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கியது SC: பின்னணி என்ன?


2024 நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு நடைபெறும் மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி கட்சியையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் உத்தவ் தாக்கரே. மகாராஷ்டிராவின் முக்கிய கட்சியான தேசியவாத காங்கிரசும் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் உள்ளது. ஆனால், தற்போதைய இந்த நிகழ்வு இருவருக்கும் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பாம் வைக்க ரோபோடிக்ஸ் படிப்பு... ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கர்நாடகாவில் சதித்திட்டம்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ