புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 352 பேருக்கு சல்லான்களை அளித்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேப்போல் மும்பையில் 778 பேர் குடிதுதவிட்டு வாகனம் ஓட்டியதாகவும், போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதாக 1100 பேருக்கு சல்லான்கள் அளிக்கப்பட்டு இருப்பதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.


ஒழுங்கான கொண்டாட்டங்களை உறுதி செய்வதற்காக, நாடுமுழுவதும் பலத்த காவல்துறை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக சந்தைகள், மால்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் மதுக்கடைகள் ஆகியவற்றின் அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. அனைத்து பி.சி.ஆர் வேன்கள், ராஃப்டார் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிரகார் வேன்கள் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் மாறும் வகையில் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தலைநகர் டெல்லியின் கொனாட் பிளேஸ் போன்ற அதிக இடங்கள் எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் பலத்த காவல்துறை இருப்பு, தீயணைப்பு டெண்டர் வரிசைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 


இதனிடையே காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் மேற்கொண்ட சோதனையில், குடித்துவிட்டு வாகன் ஓட்டியதாகவும், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாகவும்  நாடுமுழுவதும் 10000-க்கும் மேற்பட்டோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதில் அதிகப்பட்சமாக மும்பையில் 1100 பேருக்கு போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்., இரவு துவங்கி விடியற்காலை 6.00 வரை நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 5,538 பேரிடம் சோதனை மேற்க்கொள்ளப்பட்டது. இதில் 578 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் எனவும், 200 பேர் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு 433 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.