அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது.  இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் தனது கவலையை தெரிவித்து இருந்தார். இதனுடன் மத்திய உள்துறை அமைச்சகம் மீதும் கடுமையாக குற்றம் சாட்டை சுமத்தி இருந்தார். கிறிஸ்மஸ் அன்று மத்திய அமைச்சகம் இப்படியொரு முடிவை எடுத்திருப்பதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மத்திய அரசின் நடவடிக்கையால் 22000 அதிகமான அந்நிறுவனத்தை நம்பி உள்ள நோயாளிகள் ,மற்றும் ஊழியர்கள் உணவு, மருந்துகள் இல்லாமல் தவித்து வருவதாக முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். மேலும் சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது என தனது ட்விட்டர் பக்கத்தில் மம்தா தெரிவித்து இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதற்கட்ட தகவலின் படி மத்திய அரசின் உத்தரவின் பேரில் அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி, இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு எல்லாம் தெரியும், நாங்கள் இதுக்குறித்து எதுவும் பேசப் போவதில்லை என்று விளக்கம் அளித்து இருந்தனர்.


ALSO READ | அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி வங்கிக் கணக்கு முடக்கம் -மத்திய அரசு விளக்கம்


அதன்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்ததுடன் அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியால் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு தரப்பில் இருந்து முடக்கவில்லை என்றும் அந்த அமைப்பின் சார்பில் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்குமாறு "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா"வுக்கு கடிதம் எழுதியதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து இருந்தது.


இந்த நிலையில் தற்போது, மிஷினரீஸ் ஆப் சேரிட்டி நிறுவனமே தங்கள் கணக்குகளை முடக்கி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு நிதி சட்டத்தின் கீழ் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி நிறுவனத்தின் உரிமையை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் போதிய தகுதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. விண்ணப்பத்தை மறு ஆய்வு செய்யக்கோரி மிஷினரீஸ் ஆப் சேரிட்டி தொண்டு நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. 


மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்றால் என்ன?
1950 இல் அன்னை தெரசா கல்கத்தாவில் (தற்போது கொல்கத்தா) மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியை நிறுவினார். இது ஒரு ரோமன் கத்தோலிக்க தன்னார்வ மத அமைப்பாகும், இது உலகின் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு மனிதாபிமான அடிப்படையில் தனது சேவையை செய்து வருகிறது. இது 4500 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மிஷனரிகளின் சபையைக் கொண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR