லக்னோ: கொரோனா ஊரடங்கு உத்தரவால், உத்தரபிரதேச தலைநகர் லக்னோ முழுவதும் மூடப்பட்டு உள்ளதால், பிரசவத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்ல வாகனம் இல்லாததால், நடந்தே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் சாலையோரத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். பிரசவத்திற்குப் பிறகு, உள்ளூர் மக்களும் முன்னாள் கவுன்சிலரும் சேர்ந்து, அந்தப் பெண்ணையும் குழந்தையையும் கோலகஞ்சில் உள்ள டஃபெரின் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலிகஞ்சில் உள்ள நட்வா கல்லூரி அருகே ஒரு சேரியில் (குடிசை பகுதி) வசித்து வந்த சல்மானின் மனைவி நஸ்ரானா (வயது 28) ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார். திங்கள்கிழமை காலை நஸ்ரானாவஉக்கு பிரசவ வலி தொடங்கியது. 


அவரது கணவர் சல்மானின் கூற்றுப்படி, ஆம்புலன்ஸ் அழைத்தும் வராததால், மற்ற வாகனமும் கிடைக்காததால், வேறு வழிகள் எதுவும் இல்லாததால், அவர் தனது மனைவியுடன் கோலாகஞ்சில் உள்ள டஃபெரின் மருத்துவமனைக்கு கால்நடையாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சாலையிலேயே குழந்தை பிறந்தது. 


மனைவி மற்றும் புதிதாகப் பிறந்த இருவரும் சுமார் இரண்டு மணி நேரம் சாலையில் கிடந்தனர். இதன் பின்னர், உள்ளூர்வாசிகளும், முன்னாள் கவுன்சிலருமான ரஞ்சித் சிங் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நிதி உதவி செய்து, பிறந்த குழந்தையை கோலகஞ்சில் உள்ள டஃபெரின் மருத்துவமனையில் அனுமதித்தனர் எனக் கூறினார். 


மருத்துவமனையின் மருத்துவர் கூற்றுப்படி, மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்த இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். மகப்பேறு கோவிட் -19 சோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை செவ்வாய்க்கிழமை வரும். அதுவரை மகப்பேறு தனி வார்டில் வைக்கப்பட்டு உள்ளனர் என்றார்.