மாலத்தீவில் (Maldives) உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்கும், பொருளாதார தளத்தை விரிவுபடுத்துவதற்கும், பொருளாதாரத்தை மேலும் வலுவாக்கவும், உதவுவதாக  இந்தியா உறுதியளித்துள்ள நிலையில்,  இந்தியா மாலத்தீவுகளில் கட்டியுள்ள 67 குழந்தைகள் பூங்காக்களை திங்கள்கிழமை ஒப்படைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கான நிகழ்ச்சியில், இரண்டு நாள் பயணமாக இங்கு வந்துள்ள வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா, 67 குழந்தைகள் பூங்காக்களை பரிசளிப்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், தீவுகளில் உள்ள வடக்கு முதல் தெற்கு முதல் அனைத்து பகுதிகளும் பயனடையும் என்றார்.


இந்தியா மாலத்தீவின் (Maldives) நெருங்கிய அண்டை நாடு மற்றும் சிறந்த நட்பு நாடு என்றும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளிப்பதாகவும் அவர் கூறினார்.


உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், பொருளாதார தளத்தை விரிவுபடுத்துதல், பொருளாதாரத்தை (Economy) மிகவும் வலுவாக்குதல், வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்படுவதற்கும் மாலத்தீவு அரசாங்கத்தை ஆதரிப்பதை இந்தியா (India) நோக்கமாகக் கொண்டுள்ளது, ஷ்ரிங்க்லா கூறினார்.


இந்தியாவிற்கு மாலத்தீவுகளுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ஒப்பந்தங்கள் பெரிய முதலீட்டுத் திட்டங்கள் முதல் மிக முக்கிய சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் (HICDP) வரை உள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் தீவில் உள்ள சமூகங்களின் வாழ்க்கையில் உடனடி மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.


ALSO READ | US Election 2020: ஜோ பிடனுக்கு வாழ்த்து சொல்லாமல் சீனா மவுனம் காப்பது ஏன்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR