லக்னோ: மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் செவ்வாய்க்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 85. டாண்டனின் மறைவை அவரது மகன் அசுதோஷ் அறிவித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அப்பா அவர்கள் இயற்கை எய்தினார்" எனப் பதிவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டான்டன் (Governor Lalji Tandon) ஜூன் 11 அன்று லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் சுவாசப் பிரச்சினை, சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டார்.


 



டான்டன் உத்தரபிரதேசத்தில் (Uttar Pradesh) கல்யாண் சிங் அரசாங்கத்தில் அமைச்சரானார். பின்னர் பாஜக-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியின் மாயாவதி ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.


ALSO READ | சிவ்ராஜ் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேசத்தில் 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்


மத்திய பிரதேச (Madhya Pradesh Governor) ஆளுநராக லால்ஜி டாண்டனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார். அதன் காரணமாக அவருக்கு பதிலாக உத்தர பிரதேச ஆளுநராக இருக்கும் ஆனந்திபென் படேல் (Anandiben Patel), மத்திய பிரதேச மாநிலத்திற்கு பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இவர் முன்னிலையில் தான் மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.