மோடி ஆட்சியை கண்டு ஹிட்லரே தற்கொலை செய்துகொள்வார் -மம்தா!
கலவரம், கொலைகள் மூலம் அரசியல் ஞானஸ்நானம் பெற்றுள்ளார் பிரதமர் மோடி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கலவரம், கொலைகள் மூலம் அரசியல் ஞானஸ்நானம் பெற்றுள்ளார் பிரதமர் மோடி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மம்தா பானர்ஜி இன்று பிரச்சாரம் மேற்கொன்டார்.
வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மேற்கு வங்காளம் மாநிலத்தில் ராய்கஞ்ச் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலவரம், கொலைகள் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஞானஸ்நானம் பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.
மேலும் உலகிலேயே மிகப்பெரிய சர்வாதிகாரியாக திகழ்ந்த ஹிட்லர் இன்று உயிருடன் இருந்திருந்தால், மோடியின் செயல்பாடுகளை கண்டு தற்கொலை செய்திருப்பார் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மத்தியில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க இயலாது. ஏனென்றால், பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போட்டியிடும் திறன் காங்கிரசுக்கு இல்லை என்று குறிப்பிட்டு பேசினார். ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை வீழ்த்தவே கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன, அந்தவகையில் மோடி அதிகாரத்தை விட்டு வெளியேறிய பின்னர் எதிர்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்க செயல்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.