உலக கிரிக்கெட் உங்களின் ஹெலிகாப்டர் ஷாட்களை மிஸ் செய்யும் மஹி.. என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி குறித்தும், அவரது தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் சிலாகித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டரில், 'தோனி தனது தனித்துவமான கிரிக்கெட் விளையாட்டின் மூலம் மில்லியன் கணக்கானவர்களை தனது ரசிகனாக மாற்றியுள்ளார். வரும் காலங்களில் இந்திய கிரிக்கெட் அணியினை வலுப்படுத்த அவர் தொடர்ந்து பங்களிப்பார் என நம்புகிறேன். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இனி கிரிக்கெட் உலகம் ஹெலிகாப்டர் ஷாட்களை மிஸ் செய்யும்.' என பதிவிட்டுள்ளார்.



யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் என்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி வெளிப்படையாக அறிவித்துள்ளார். இந்நிலையில், தோனி அரசியலில் சேர வாய்ப்புள்ளது என்று செய்திகள், வதந்திகள் வர தொடங்கி உள்ளது. தோனிக்கு ஏற்கனவே பாஜகவினர் சார்பாக அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. எங்கள் கட்சியில் தோனி சேர்ந்தால் அவரை சேர்த்துக்கொள்வோம் என்று பாஜக சார்பாக சில எம்பிக்கள், முக்கிய உறுப்பினர்கள் அவருக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். கம்பீர் போல எங்கள் கட்சியில் சேர்ந்து எம்பி ஆகிவிடுங்கள் என்று பாஜகவினர் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர்.