மும்பை: மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை போக்குவரத்து ஊழியர்கள் வாபஸ் பெறப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெகுநாட்களாக தங்களக்கு சம்பள உயர்வு வழங்காததால் மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள், கடந்த அக்., 17-ஆம் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


இதனால் மகாராஷ்டிர மாநில மக்கள் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடங்களுக்கு செல்வதில் பெரும் சிரமத்தினை அனுபவித்தனர். இதனால் நகரம் முழுவதுமே வெறிச்சோடி காணப்பட்டது.


மேலும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது. அது சட்டவிரோதமானது. எனவே வேலைநிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. 


இந்நிலையில் மும்பை ஐகோர்ட் உத்தரவு குறித்து போக்குவரத்து துறை ஊழியர் சங்கங்கள் நேற்று ஆலோசனை நடத்தின. அப்போது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கோர்ட் உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று காலை முதல் மராட்டிய மாநிலத்தில் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.