மும்பை: மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் குர்லா - அம்பேர்நாத் இடையே ஓடும் புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகாலை 5.53 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


 



 



 


ரயில் தடம் புரண்டதால் தண்டவாளம் சேதம் அடைந்ததுள்ளது. இதனால், மத்திய மும்பை புறநகர் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக நேற்று, மேற்கு வங்க மாநிலம் சீல்டாவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு சென்ற ரயில்,  கான்பூரை அடுத்த ரூரா ரெயில் நிலையம் அருகே நேற்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ரெயிலின் 2 பொது பெட்டிகள் மற்றும் 14 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின. இச்சம்பவத்தில் 65 பயணிகள் காயம் அடைந்தனர்.