மும்பை கர்ப்பிணிக்கு தொடர்வண்டியில் கிடைத்த பரிசு!
முப்பையினை சேர்ந்த கர்பிணி, தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே இரட்டை குழுந்தை பிறந்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
முப்பையினை சேர்ந்த கர்பிணி, தொடர்வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே இரட்டை குழுந்தை பிறந்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோட்டக்பூர் பகுதியை சேர்ந்தவர் செயிக் சால்மா தப்பாசும். இவர் LTT விஸாகப்பட்டினம் எக்ஸ்பிரஸில் பயணித்துக்கொண்டு இருக்கும் போது இரட்டை குழந்தையினை பிரசவித்துள்ளார்.
தொடர்வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஆதரவின்றி தவித்த அவருக்கு ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர்கள் நீலம் குப்தா மற்றும் சுரேக்க கடம் ஆகியோர் உதவி செய்து பிரசவம் செய்துள்ளார்.
பிரசவத்திற்கு பின்னர் பிறந்த குழந்தைகள், சால்மாவினை கல்யாண் ரயில்வே நிலையத்திற்கு அருகில் இருந்த ருக்மணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது குழந்தைகளும், தாயும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிறந்த இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தினையும், தாயின் புகைப்படத்தினையும் தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.