நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்க்கு முஸ்லீம் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது இது தொடர்பாக பொது சிவில் சட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சட்டதுறை அமைச்சகத்திற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.


இதைக்குறித்து அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய தலைவர் ஹஸ்ரத் மவுலானா வாலி ரஹ்மானி கூறியதாவது:- நம்முடைய நாட்டில் பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளது. அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். எனவே பொதுசிவில் சட்டம் நம்முடைய நாட்டிற்கு நல்லது அல்ல. அரசியலமைப்பு சட்டம் கொண்டு வந்த ஒப்பந்தங்களின் மூல ம்  நாம் வாழ்ந்து வருகிறோம். அரசியலமைப்பு சட்டம் வாழ்வதற்கும், மத நம்பிக்கைகளை கடைப்பிடிப்பதற்கு எங்களுக்கு வழி வகை செய்துள்ளது. நாடு முழுவதும் பொது சி வில் சட்டத்தை நாங்கள் எதிர்ப்போம். திசைதிருப்பும் தந்திரங்களை மோடி அரசு தொடர்ந்து உபயோகித்து வருகிறது. எங்கள் மத நெறிமுறைகளில் நாங்கள் திருப்தியாக உள் ளோம். ஒவ்வொரு மதத்தினரும் தங்களது மத நம்பிக்கைகளுடன் வாழவே விரும்புகின்றனர். முஸ்லீம்களும் விடுதலை போராட்டத்தில் சம அளவில் பங்கெடுத்துள்ளனர். ஆ னால் அவர்களது பங்கெடுப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 3 முறை தலாக் சொல்லும் முறை மற்றும் இஸ்லாமியர்களிடையே நிலவும் பெண்களுக்கு எதிரான நடை முறைகள் பற்றி பொது கருத்து கேட்கப்பட்டு வருவதாக கூறுவது பொய்யானது. இந்த தகவலை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.