பி.எஸ்.எல்.வி., - சி 40' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பி.எஸ்.எல்.வி., - சி 40' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்ட, 'கார்டோசாட் - 2' செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள் ஆகும்.


இஸ்ரோவின் கார்டோசாட் - 2 ரக செயற்கைக்கோள், இன்று காலை, 9:28 மணிக்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் விண்ணில் ஏவப்பட்டது. 


கார்டோசாட் - 2 செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள். செயற்கைக்கோள் வரிசையில், கார்டோசாட் - 2, ஏழாவது செயற்கைக்கோள்; இதன் எடை, 710 கிலோ. இதில், பூமியின் இயற்கை வளங்களை, பல்வேறு கோணங்களில் படமெடுத்து அனுப்பும் வகையில், சக்தி வாய்ந்த கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 100வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி சாதனை புரிந்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். விண்வெளி தொழில்நுட்பம் விவசாயிகள், மீனவர்களுக்கு பலன் தரும் என டிவிட் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.