லக்னோ: அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவ அமைப்பின் தலைவர் பதவியேற்பு  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற உ.பி.யியன் முன்னால் முதல்வர் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் உ.பி. அரசு தடுத்து நிறுத்தியது. இச்சம்பவம் பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது. 


இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மீது லக்னோ போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கத் தக்கது. அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பா.ஜ.வின் சகிப்புத்தன்மைக்கு குறைந்துள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம். உண்மையில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது எனக் கூறினார்.