நாகாலாந்து வன்முறையில் அரசு வாகனங்களுக்கு தீ வைப்பு; 144 தடை உத்தரவு
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் வன்முறையில் போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பிப்ரவரி மாதத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த இட ஒதுக்கீட்டை கண்டித்து பழங்குடியின அமைப்புகள் பேரணி நடந்தினர். ஆனால் இந்த பேரணியில் வன்முறை வெடித்து உள்ளது. இதில் பழங்குடியின அமைப்புகள் உள்பட பல அரசியல் கட்சியினரும் போராட்ட்ங்களை நடத்தி வருகின்றனர்
ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்த நாகாலாந்து மாநில அரசு தீவிரமாக இருப்பதால், தேர்தல் நாளான நேற்று மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. தலைநகர் கொகிமா முழுவதும் வன்முறை சம்பவங்கள் நிறைவேறின. மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், துணை கமிஷனர் அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டன. கோகிமா மாநகராட்சி கட்டிடம், மண்டல போக்குவரத்து அலுவலகம், கலால் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. முதல்–மந்திரி ஜெலியாங் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என்று பழங்குடியின அமைப்புகள் அறிவித்துள்ளன.
இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. நூற்றுக்கணக்கான கூடுதல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.