காஷ்மீர் நக்ரோடா தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி, 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அதிகாரிகள் உள்பட 7 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர்.
ஜம்மு: காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அதிகாரிகள் உள்பட 7 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் சிலர் ஜம்மு புறநகர் பகுதியான நக்ரோட்டாவில் உள்ள ராணுவத்தின் 16-வது படைப்பிரிவு முகாம் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
நேற்று காலை அந்த முகாமிற்குள் நுழையும் முயற்சியாக தீவிரவாதிகள் சிலர் போலீஸ் சீருடையில் அங்கு வந்தனர். அவர்கள் கையெறி குண்டுகளை வீசியதுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர் மீது துப்பாக்கிகளாலும் சுட்டனர். மேலும் அப்பகுதியிலிருந்த 12 வீரர்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் என 16 பேரை அவர்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.
இதனால் ராணுவத்தினர் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி, அவர்கலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக ராணுவ வீரர்கள் உள்பட 16 பேரை பிடித்து வைத்து இருந்ததால் அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் செயல்பட்டனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் இருவரும், வீரர்கள் 5 பேரும் வீர மரணம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பணயக் கைதிகளாக பிடிபட்டவர்களை ராணுவ வீரர்கள் மீட்டனர்.
தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள ஜம்மு, ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர் மரணம்:-
மேஜர் கோசாவி குணால் மன்னதிர் (33) மகாராஷ்டிரா சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர், மேஜர் அக்ஷய் கிரிஷ் குமார் (31) கர்நாடக பெங்களூருவை சேர்ந்தவர்
என்கவுண்டரில் கொல்லப்பட்ட வீரர்கள்:-
அவில்தார் சுக்ராஜ் சிங் (32) பஞ்சாபில் குர்தாஸ்பூராவை சேர்ந்தவர், லான்ஸ் நாயக் கதம் சாம்பாஜி யஷோவன்த்தரோ (32) மகாராஷ்டிரா நான்டெட்பகுதியை சேர்ந்தவர், கிரினதியர் ராகவேந்திரா சிங் (28) ராஜஸ்தானில் தோல்பூர் இடத்தை சேர்ந்தவர், துப்பாக்கி மனிதன் அசிம் ராய் (32)
நேபால் கோடங்கை சேர்ந்தவர்.
மேலும் இந்த ஆண்டில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது இது 3-வது முறை ஆகும். ஏற்கனவே ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம், செப்டம்பர் மாதம் காஷ்மீர் உரி ராணுவ முகாம் ஆகியவற்றில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தினர்.