நக்சலைட் அதிக்கம் உள்ள பகுதியில் தேர்வான பெண் ஐஏஎஸ்
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நக்சல் ஆதிக்கம் மிக்க தாண்டேவாடா பகுதியிலிருந்து பெண் ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வில் 99வது இடத்தை பிடித்துள்ளார்.
நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலமும் ஒன்று. இங்கு தாண்டேவாடா பகுதியில் அடிக்கடி நக்சலைட்கள் தாக்குதல் நடக்கும். இதனிடையே இந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 99-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என முயற்சி செய்த அவருக்கு முதல் முயற்சியில் தோல்வி கிடைத்தது. இருப்பினும் 2-வது முயற்சியில் நம்ரதாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற அவர், மாவட்ட நிர்வாகம் நடத்திய ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நம்ரதாவின் வெற்றிக்கு முதல்வர் ரமன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். நம்ரதாவின் வெற்றி மற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் எனக் கூறியள்ளார்.