ட்விட்டர் பக்கத்தில் மாணவன் கேட்ட பரிசை அவருக்கு அனுப்பி வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்கண்ட், ஐஐடி-யில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து வருபவர் ராபேஷ் குமார் சிங், இவர் பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில், ``கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் நீங்கள் பங்கேற்ற பஞ்சாயத் ராஜ் நிகழ்ச்சியை நான் பார்த்தேன். மிகவும் சிறப்பாகப் மக்களிடம் பெசியிருந்திர்கள். மேலும் அந்த நிகழ்ச்சியில் நீங்கள் அணிந்திருந்த தங்க நிற மாலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே போல் எனக்கும் ஒன்று கிடைக்குமா? ”எனக் கேட்டிடு பதிவு செய்துள்ளார். 


இதைப் படித்த பிரதமர் மோடி அடுத்த நாளே மாணவன் கேட்ட மாலையை, ஒரு கடிதத்துடன் அவருக்கு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியிருந்த கடிதத்தில், ``பஞ்சாயத் ராஜ் நிகழ்ச்சியில் நான் அணிந்திருந்த மாலை பற்றிய உங்களின் ட்விட்டர் பதிவைப் படித்தேன். நான் இந்தக் கடிதத்துடன் நீங்கள் விரும்பிய மாலையையும் அனுப்பியுள்ளேன். உங்களின் சிறந்த எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துகள்.” என அந்த கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


கடிதம் கிடைத்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்த அந்த மாணவன், பிரதமருக்கு நன்றி கூறி மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட்டரை பதிவிட்டுள்ளார். இந்த பரிசானது மாணவன் கேட்ட 7 நாட்களில் எனக்கு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


அந்த ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளது..! 


``உங்களிடமிருந்து வந்த கடிதம் மற்றும் பரிசைப் பெற்றுக் கொண்டதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். உங்களின் இந்த அழகான பரிசு மற்றும் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. இதைக்கண்டதும் எனக்கு பறப்பது போல் இருக்கிறது என தெரிவித்துள்ளார்” எனக் கூறியிருந்தார்.