கர்நாடகா விவகாரத்தில் பாஜக அரசு குதிரை பேர அரசியல் -காங்கிரஸ்
கர்நாடகா விவகாரத்தில் மத்திய பாஜக அரசு குதிரை பேர அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜ்வாலா குற்றம்சாட்டியுள்ளார்!
கர்நாடகா விவகாரத்தில் மத்திய பாஜக அரசு குதிரை பேர அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜ்வாலா குற்றம்சாட்டியுள்ளார்!
டெல்லியில் செய்தியாளர்களுடன் இன்று நடைப்பெற்ற சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜ்வாலா, கர்நாடகா சட்டசபையில் 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ., க்கள் பதவி விலகி உள்ளதையடுத்து மத்தியில் பாஜக அரசு குதிரை பேர அரசியலில் இறங்கியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. ஆட்சியில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதாதள காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் கொண்டு வந்து அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள் மொத்தம் 14 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, மொத்தமாக கோவா சென்றுள்ளனர். இந்த ராஜினாமா குறித்து வரும் செவ்வாய் அன்று முடிவெடுப்பதாக, சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கு கடந்த 2018-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 1 தெதகுதியிலும் 2 சுயேட்சைகளும் வெற்றி பெற்றனர்.
தனிப்பெரும் கட்சியாக பாஜக வென்றபோதும், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து 78+37 = 115 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 2 சுயேட்சை ஆதரவு என்று ஆட்சியை பிடித்தனர். இந்நிலையில் தற்போது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனத தளம் கூட்டணியின் 14 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக ராஜினாமா செய்துவிட்டதால், பாஜக எளிதில் ஆட்சியை பிடிக்கும் சூழல் அங்கு எழுந்துள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 26 எம்.பி.,தொகுதிகளில் 25-ல் பாஜக வெற்றி பெற்றது. அதிலிருந்தே கர்நாடகா அரசுக்கான நெருக்கடிகள் மறைமுகமாக பாஜக கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனத தளம் கூட்டணி எம்எல்ஏ-க்கள் ராஜினாமாவிற்கு பின்னர் பாஜக-வின் திட்டம் இருக்கலாம் என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.