இன்றைய "மன் கி பாத்" நிகழ்ச்சியில் தீவிரவாதத்தினை வீழ்த்த சர்வதேச நாடுகள் கைகோர்க்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதாந்திரம் வானொலி மூலமாக மக்களிடையே, பிரதமர் மோடி "மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்றுவது வழக்கம்.


அந்த வகையினில் இன்று அவர் உரையாற்றுகையில் கூறியதாவது:- 


  • நம் நாட்டின் அரசியல் சட்டத்தினை வடிவமைத்த ஞானிகள் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். அச்சட்ட அமைப்பினில் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை பெற்றிருப்பதில் நாம் பெருமைப்பட வேண்டும்.

  • 9 ஆண்டுகளுக்கு முன் மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். 

  • 40 ஆண்டுகளாக தீவிரவாதம் பற்றி இந்தியா எச்சரித்து வரும் நிலையில், உலக நாடுகள் அப்போது அதை பெரிதாக கருதவில்லை, ஆனால் தற்போது தீவிரவாதத்தால் ஏற்படும் பேரழிவை அனைவரும் உனர்ந்து வருகின்றனர்.

  • இந்த தீவிரவாதத்தினை வீழ்த்த சர்வதேச நாடுகள் கைகோர்க்க வேண்டும்.

  • தமிழத்தில் 900 ஆண்டுக்கு முந்தைய சோழர்களின் கடற்படையில் பெண்கள் சென்றதினை மேற்கொள் காட்டி, இந்திய ராணுவத்தில் பெண்கள் இடம்பெற வேண்டும் எனவும், பெண்களுடைய பங்களிப்பு மிகவும் பாராட்ட கூடியது.


எனவும் தெரிவித்துள்ளார்.