திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது,


உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனுவைத் தாக்கல் செய்துள்ளது. 


தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


எந்தெந்த சந்தர்ப்பங்களில், நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படவோ, பாடப்படவோ வேண்டும் என்பது பற்றியும், அப்போது கடைபிடிக்க வேண்டிய கண்ணியம் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை இந்த குழு வகுக்கும். குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் அக்குழு தனது சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் எனவும்.


மேலும் இந்த குழுவை அமைத்து வழிமுறைகளை உருவாக்க 6 மாதங்களாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவற்றை பரிசீலித்து, உரிய அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிடும் ஆகவே, அதுவரை ஏற்கனவே உள்ளே நிலையே, அதாவது தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவுக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். அதற்காக அந்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.