சிலை உடைப்பு சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக கட்சியை பொறுத்தளவில் யாருடைய சிலையையும் வீழ்த்துவதற்கு ஆதரவு கிடையாது. மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றுவதே நமது முக்கிய எண்ணம். 


தமிழகம் மற்றும் திரிபுராவிலுள்ள பாஜக கட்சி தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன். சிலைகளை சேதப்படுத்துவோர் எங்கள் கட்சியினராக இருந்தால், பாஜகவால் கடும் கட்சிரீதியான நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். புதிய இந்தியாவை உருவாக்கி, மக்களின் வாழ்க்கைக்கு பயனளிக்க கூடிய ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு பாஜக எப்போதுமே தயாராக உள்ளது. 



 



 



 



 



 


இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.