விமானத்தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலியா? அல்லது 300 மரங்கள் பலியா?: சித்து
இந்திய வான்வழி தாக்குதலைக் குறித்து மீண்டும் மீண்டும் காங்கிரஸ் அமைச்சர் நவாஜோத் சிங் சித்து கேள்வி எழுப்பி வருகிறார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் சுமார் 300-க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
ஆணைகள் தீவிரவாத முகாம்களை அழித்தததாக மத்திய அரசு கூறுவது ஆதாரமற்றது, வாக்கு வங்கிக்காகவே மத்திய அரசு தவறான தகவல்களை கூறிவருகிறது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுக்குறித்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவஜோத் சிங் சித்து, 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது உண்மையா அல்லது பொய்யா..? அப்படியானால் அதன் நோக்கம் என்ன..? நீங்கள் கொல்லப்பட்டன என்று கூறுவது தீவிரவாதிகளையா? அல்லது மரங்களையா? இது தேர்தலுக்காக நடத்தப்படும் ஏமாற்று வித்தையா?
நீங்கள் எதிரி நாட்டுடன் சண்டையிடுவாக வேடமிட்டு சொந்த நாட்டை ஏமாற்றுகிறீர்கள். நாட்டில் புனிதமாக கருதப்படும் ராணுவத்தை வைத்து அரசியல் செய்வதை நீங்கள் நிறுத்துங்கள் என்று கடுமையான கேள்விகளை எழுப்பி தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.