பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒதியன் கிராமத்தில் பலத்த காற்று வீசியதால்  உயரழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்து தீப்பற்றி எரிந்தது. தீ சுமார் 300 ஏக்கர் பயிர்களை நாசமாக்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநில மந்திரியாக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து ஒதியான் பகுதிக்கு சென்றார். அங்கு மின்சார கசிவு காரணமாக விளைந்த பயிர்களை இழந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.  அப்போது தீயில் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு ரூ. 24 லட்சம் நிதிஉதவி வழங்குவதாக அறிவித்தார். பஞ்சாப் மாநில அரசு ஏக்கருக்கு 8 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.


விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறிய சித்து, பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


விவசாயிகளுக்கு உதவ வேண்டியது என்னுடைய பணியாகும், “மாநில அரசு அறிவித்தது நிதி போதுமானது இல்லை என்பது எனக்கு தெரியும், அதனால்தான் இங்கு வந்தேன். விவசாயிகளின் வலி எனக்கு தெரியும். நானும் விவசாயிகளுக்கு நிதி உதவியாக வழங்குவேன்.” என்றார். 


நான் தொலைக்காட்சியில் பணி புரிகிறேன், நான் பணம் சம்பாதிக்கின்றேன், எனவே விவசாயிகளுக்கு நிதிஉதவி வழங்குவதில் எனக்கு எந்தஒரு கஷ்டமும் கிடையாது எனக் கூறினார்.


விவசாயிகளுக்கு நிதி உதவி அறிவித்து உள்ள சித்துவை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகிறார்கள். சமூக வலைதள பயனாளர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.