சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் தேசிய போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி சோதனை நடத்தினர். இதில், அவர்களால் அதிகளவில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.


இந்த சோதனையில் இந்தியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கொக்கைன் போதைப்பொருள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கொக்கைன், 200 கிலோ மெத்தம்படமைன் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


மொத்தம் ரூ.1,300 கோடி திப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக, 5 இந்தியர்கள், 1 அமெரிக்கர், 2 நைஜீரியர்கள் மற்றும் 1 இந்தோனேசியர் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.