மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க, அவர்களை அஜித் பவார் ஆதரித்தது இருப்பது "அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல" என்று NCP கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். இது மகாராஷ்டிரா அரசியலில் மேலும் அதிர்ச்சியூட்டும் திருப்பமாக அமைந்துள்ளது. அதாவது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவை ஆதரிப்பது என்பது அஜித் பவாரின் தனிப்பட்ட விருப்பம். அதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் விருப்பம் இல்லை. அஜித் பவாரின் முடிவுக்கு ஆதரவு இல்லை என சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா அரசியலில் என்ன நிலவுகிறது என்று அரசியல் வல்லுனர்கள் உட்பட பலர் குழப்பத்தில் உள்ளனர். இன்று அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். 


தற்போது NCP கட்சியின் தலைவர் சரத் பவார், பாஜகவை அஜித் பவார் ஆதரித்தது இருப்பது "அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல" எனக் கூறியுள்ளார். 


 



மறுபுறத்தில் சிவசேனா கட்சியில் உள்ள சில எம்.எல்.ஏ-க்களும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளனர். 


தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்படுமா? இல்லை சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோருமா? அல்லது பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மாநிலத்தில் தொடருமா? போன்ற கேள்விகளுக்கு விடை விரைவில் கிடைத்து விடும்.