மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் வரும் ஜூலை 20-ஆம் நாள் நிகழ்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் முத்தலாக உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டிவருகிறது. இதற்கிடையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டி வந்தது.


இந்நிலையில் இன்று மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ளது. வரும் வெள்ளிகிழமை காலை 11 மணிக்கு இந்த தீர்மானத்தின் மீது நடக்கவுள்ள விவாதத்தில் மத்திய அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க பாஜக-விற்கு 268 MP-களின் ஆதரவு தேவைப்படுகிறது.


535 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற மக்களவையில் தற்போதைய நிலவரப்படி பாஜக (சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நீங்கலாக) - 274 உறுப்பினர்கள், சிவசேனா -18, லோக் ஜனசக்தி-6, சிரோன்மணி அகாலிதளம்-3 என மொத்தமாக 313 உறுப்பினர்களை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டுள்ளது.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 63 உறுப்பினர்களும், அதிமுக 37 உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 34 உறுப்பினர்களும், பிஜு ஜனதா தளம் கட்சியில் 20 உறுப்பினர்களும், தெலுங்கு தேசம் கட்சியில் 16 உறுப்பினர்களும், தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியில் 11 உறுப்பினர்களும் உள்ளனர்.


மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி முன்வைத்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கப்போவதாக காங்கிரஸ், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் திரினாமுல் காங்கிரஸ் ஆகியவை அறிவித்துள்ள நிலையில். அதிமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் நடுநிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று, அன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறும். இந்த வாக்கெடுப்பின் போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க தேசிய ஜனநாயக கூட்டணி தனது எதிர் கட்சி தலைவர்களின் ஆதரவை நாட வேண்டிய சூழல் ஏற்படுமா? என எதிர் பார்க்கப்படுகின்றன.


அதேவேலையில் பாமக MP அன்புமணி ராமதாஸ், ஸ்வாபிமானி பாக்‌ஷா MP ராஜு ஷெட்டி ஆகியோரின் ஆதரவினை பெறுவும் பாஜக முயற்சித்து வருவதாக தெரிகிறது. நாடுமுழுவதும் 21 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக-விற்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பெரிய சவாலாக இருக்குமா? என்பது வெள்ளி அன்று மாலை தெரியவரும்.