என்டிடிவி பிரணாய் ராய் வீடு உட்பட 4 இடங்களில் சிபிஐ ரெய்டு

டெல்லியில் உள்ள என்டிடிவி துணை நிறுவனர் மற்றும் நிர்வாக துணை தலைவர் பிரணாய் ராய் வீட்டில் இன்று சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
இதனால் அந்த பகுதியில் ஏரளாமான பத்திரிக்கையாளர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரனாய் ராய் அவரது மனைவி ராதிகா ராய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில் அவர்களது வீடு உட்பட 4 இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அவரது வீடு அமைந்துள்ளது.
என்டி டிவி நிறுவனர் பிரணாய் ராய், பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி கடந்த ஆண்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கான ஆதாரங்களையும் இணையதளம் ஒன்றில் நேற்று சுப்ரமணியசாமி பதிவிட்டார்.
இந்நிலையில் இந்த ஆதாரங்களின் அடிப்படையில் டில்லியில் உள்ள பிரணாய் ராயின் வீடு, டேராடூன் உள்ளிட்ட 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.