மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடைப்பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் சிலர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.


மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மதுரை ஐகோர்ட் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இதனையடுத்து இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என அனுமதி அளித்தது. மேலும் மதுரை ஐகோர்ட் விதித்த தடை உத்தரவை நீக்கியதுடன், நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை மாநில ஐகோர்ட்கள் விசாரிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.


நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் அனமதி அளித்துள்ளதை அடுத்து ஜூன் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் நாளையே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.