NEET 2019: நீட் தேர்வில் தீடீர் மாற்றம்!
நாளை மறுநாள் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் திடீரென தேர்வு மையங்களை மாற்றி புதிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் திடீரென தேர்வு மையங்களை மாற்றி புதிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு "நீட் தகுதித் தேர்வை" மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த 3 ஆண்டுகளாக சிபிஎஸ்சி நிறுவனத்தால் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 5 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. 5ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு தேர்வு நிறைவு பெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட 11 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் தேர்வு நடைபெற உள்ள நிலையில் திடீரென தேர்வு மையங்களை மாற்றி புதிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தல் மற்றும் இதர தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மாற்றம் செய்யப்படுவதாக என்.டி.ஏ. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாற்றப்பட்டுள்ள தேர்வு மையங்கள் பற்றிய தகவலை அறிந்துகொள்ளலாம். இது குறித்து மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., ஈமெயில் மற்றும் வாய்ஸ் மெசேஜ் மூலமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மே 5ஆம் தேதி தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தவறாமல் புதிய ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://www.scribd.com/document/408511701/Neet-Public-Notice