எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 6-ம் தேதி நடக்கும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே, நீட் தேர்வில் மாநில பாடத்திட்டதையும் இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் 2017-ம் ஆண்டு நீட் தேர்வில் பின்பற்றப்பட்ட அதே பாடத்திட்டம்தான் 2018-ம் ஆண்டிலும் பின்பற்றப்படும் என சி.பி.எஸ்.இ விளக்கம் கொடுத்துவிட்டது.


இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 2018-ம் ஆண்டிற்கான நீட் தேர்வுகள் மே 6-ம் தேதி நடைபெறுகிறது. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிபிட்டுள்ளது.