புது டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ மற்றும் பல் படிப்புகளில் சேருவதற்கான தகுதியாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ், எம்.டி அல்லது பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி "நீட் தேர்வு" என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது, மேலும் இது அரசு உதவி பெறும் அல்லது உதவி பெறாத சிறுபான்மை கல்லூரிகளின் உரிமையை பறிக்காது என்றும் கூறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"நீட் தேர்வு" குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதி வினீத் ஷரன் மற்றும் நீதிபதி எம்.ஆர் ஷா ஆகியோரின் பெஞ்ச், நீட் மூலம் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு எடுக்கப்பட்ட முடிவு  சரியானது. தனியார் நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான அரசியலமைப்பு உரிமையில் நீட் தலையிடுகிறது என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. 


சட்டப்பிரிவு 19 (1) கீழ் நியாயமான ஒரு முழுமையான கட்டுப்பாட்டுக்கு ஒரு ஏற்பாடு  செய்யப்படுவது உரிமை மீறல் அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. மாணவர்களுக்கு தகுதி இருக்கும் இடத்தில், அவர்களை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு சிறந்த மாணவர்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது மாணவரின் நலனுக்காகவே. மருத்துவ சேர்க்கையின் தவறான நடத்தைகளைத் தடுக்க வேண்டும். இதற்காக, ஒரு சீரான நுழைவுத் தேர்வு அவசியமானது. இந்த காரணத்திற்காக மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு "நீட் தேர்வு"  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மருத்துவ சேர்க்கைகளில் தவறுகளை தடுப்பதற்கும், தகுதி குறைவாக இருப்பவர்கள் பணத்தை செலுத்தி, அதன் மூலம் சேர்க்கை நடத்தும் போக்கைத் தடுக்கவும், கல்வி நிறுவனங்களில் வணிகமயமாக்கலைத் தடுக்கவும் ஒரு சீரான நுழைவுத் தேர்வு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


இத்தகைய சூழ்நிலையில், ஒரு ஒழுங்குமுறையை உருவாக்க அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது. மேலும் இந்த ஒழுங்குமுறை உதவி மற்றும் உதவி பெறாத தனியார் மற்றும் சிறுபான்மை நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படலாம். அவ்வாறு செய்ய அரசாங்கத்திற்கு உரிமையும் உண்டு. பிரிவு -29 (1) மற்றும் 30 அதாவது மத மற்றும் மொழி போன்றவை ஒருமைப்பாட்டின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக பணியாற்றுவதற்கான உரிமையை மீறுவதில்லை என்று நீதிமன்றம் கூறியது. இந்த உரிமை அரசியலமைப்பு ஷாட்சட்டவிதிகளுக்கு மேல் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.


மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வு அவசியம் என 2012 இல்  மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.