முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் இன்று வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும், 2,500 இடங்கள் உள்ளன. 


கடந்த ஜனவரி 6ம் தேதி 2019-20 கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் சென்னை, கோவை உள்ளிட்ட, நகரங்களில் நடைபெற்றது. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் எழுதினர். தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். 


இதற்கான தேர்வு முடிவுகள், www.natboard.edu.in என்ற, தேசிய தேர்வுகள் வாரிய இணையதளத்தில், இன்று வெளியாகியுள்ளது.