இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நீட் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவப் படிப்பில்  சேர என்ற தேசிய தகுதி தேர்வு கடந்த மே மாதம் 7-ம் தேதி நடைபெற்றது. 


11 லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் 85 ஆயிரம் பேர் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்ததையொட்டி தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.


கடந்த 12-ம் தேதி மதுரை ஐகோர்ட்டு தடையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் வருகிற 26-ம் தேதிக்குள் தேர்வு முடிவை வெளியிடலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.


இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று வெளியிடபட்டது.  நீட் தேர்வு முடிவுகளை  http://cbseneet.nic.in  என்ற இணையதளத்தில் அறியலாம்.