மதுரா : உத்திரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹேமமாலினி, நெற்கதிர் அறுத்து வயலில் வேலை செய்யும் பெண்களிடம் ஓட்டு சேகரித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி MP-யாக இருந்து வரும் ஹேமமாலினி, தற்போது மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். 


அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து ஹேமமாலினியும் கதிர் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டார். பின்னர் அவர்களிடம் தனக்கு ஓட்டளிக்கும்படி பிரசாரம் மேற்கொண்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு மதுரா தொகுதியில் 3,30,000 க்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் எனக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறினர். என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஏனென்றால் மதுரா தொகுதி மக்களுக்காக நான் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் என்பதில் பெருமையடைகிறேன். 


இனி வரும் காலங்களில் இன்னும் அதிகமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம். நான் செய்த அளவிற்கு எனக்கு முன்பிருந்த யாரும் மதுராவிற்காக செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.


வயலில் பெண்களுடன் தான் வேலை செய்து, ஓட்டு சேகரித்த புகைப்படங்களை ஹேமமாலினி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.