புது தில்லி: ரயில்களின் நேர அட்டவணையை முழுமையாக மாற்ற இந்தியன் ரயில்வே இப்போது தயாராகி வருகிறது. புதிய நேர அட்டவணையைப் (New Time Table) பொறுத்தவரை, ரயில்வே இப்போது சுமார் 500 ரயில்களை நிறுத்தவும் 10,000 ரயில் நிறுத்தங்களை அகற்றவும் முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடிந்தபின், வழக்கமான முறையில் ரயில் போக்குவரத்து துவங்கிய பிறகு, இந்த நேர அட்டவணை செயல்படுத்தப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு ஊடக அறிக்கையில், நேர அட்டவணையில் இந்த மாற்றங்களுக்குப் பிறகு, இந்தியன் ரயில்வேயின் (Indian Railway) வருவாய் ஆண்டுக்கு ரூ .1500 கோடி அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் உள் மதிப்பீட்டின்படி, கட்டணம் அல்லது பிற கட்டணங்கள் அதிகரிக்கப்படாமலேயே 1500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படும்.


நேர அட்டவணை உள்ளிட்ட பிற செயல்பாட்டுக் கொள்கைகளில் மாற்றங்கள் மூலம் இது செய்யப்படும்.


ALSO READ: உலகின் முதல் சிறப்பு சுரங்கப்பாதையை உருவாக்கிய இந்தியன் ரயில்வே..


பயணிகள் ரயில் சேவையின் சராசரி வேகம் முழு வலையமைப்பிலும் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று ரயில்வே மதிப்பிட்டுள்ளது. ஐ.ஐ.டி பம்பாயின் நிபுணர்களுடன் இணைந்து இந்தியன் ரயில்வே ‘Zero Waste’ அட்டவணையை தயார் செய்துள்ளது.


புதிய நேர அட்டவணையின் சிறப்பு அம்சங்கள் என்னவாக இருக்கும்?


  • சராசரியாக, ஆண்டுக்கு 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் ஆக்கிரமிப்பு கொண்ட ரயில்களுக்கு இந்த நெட்வொர்க்கில் இடம் இருகாது.  தேவைப்பட்டால், இந்த ரயில்கள் மற்ற ரயில்களுடன் இணைக்கப்படும். இணைக்க, மக்கள் அதிகமாக பிராயாணிக்கும் ரயில்கள் தேர்ந்தெடுக்கப்படும்.


  • நீண்ட தூரம் பயணிக்கும் ரயிகளில், 200 கிலோ மீட்டருக்கும் முன் எந்த ரயில் நிறுத்தங்களும் இருக்காது. இருப்பினும், இதற்கிடையில் ஏதாவது பெரிய நகரம் இருந்தால், அங்கு நிறுத்தங்கள் இருக்கக்கூடும். மொத்தம் 10,000 ரயில் நிறுத்தங்களை (Railway Stations) அகற்ற ரயில்வே தயாராகி வருகிறது.


  • அனைத்து பயணிகள் ரயில்களும் 'ஹப் மற்றும் ஸ்போக் மாடலில்' இயங்கும். 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஹப்களாக, அதாவது மையங்களாக இருக்கும். இந்த நகரங்களில், நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களுக்கான நிறுத்தம் இருக்கும். சிறிய ரயில் நிறுத்தங்கள், ஹப் அதாவது, மையங்களுடன் மற்ற ரயில்கள் மூலம் இணைக்கப்படும். இது கால அட்டவணையின்படி இருக்கும்.


  • இது தவிர, முக்கிய சுற்றுலா இடங்களும் (Tourist Spots) புனித யாத்திரை செய்யும் இடங்களும், ஆன்மீகத் தலங்களும் ஹப்புகளாக, அதாவது மையங்களாக கருதப்படும்.


  • புதிய அட்டவணையால், மும்பை லோக்கல் போன்ற புறநகர் நெட்வொர்க்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.


புதிய நேர அட்டவணை ரயில்வேயில் கிடைக்கும் ரோலிங் பங்குடன் இசைவில் இருக்கும். இந்த ரயில்களில் 22 எல்.எச்.பி கோச்சுகள் அல்லது 24 இண்டெக்ரல் கோச் ஃபாக்டரியின் ரயில் பெட்டிகள் (Coaches) இருக்கும். 


ALSO READ: IRCTC ePayLater: பணம் இல்லாமலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!!