மக்களை மிரட்டும் வகையில் புதிதாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது. தற்போது இந்த புதிய கொரோனா மக்களிடைய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த சார்ஸ்-கொரோனா வைரஸ் 2 மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கொடிய வகை வைரஸ் (Delta Plus) இந்தியாவில் தற்போது குறைவாகவே காணப்படுவதால் இது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது மேலும் இது தொடர்பாக உடனடி கவலைக்கு அவசியம் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, 2வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் (CoronaVirus) மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது.


ALSO READ | Corona Symptoms Medication- மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு


இந்த புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தகக்கூடும் என்று டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகிறார். தற்போது புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஆனால் இந்த வைரஸை தொடந்து கண்காணித்து வருவது அவசியம் என்பதே விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR