புதுதில்லி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, டாக்கா (வங்காளதேசம்), N'Djamena (சாட்), துஷான்பே (தஜிகிஸ்தான்) மற்றும் மஸ்கட் (ஓமன்) ஆகிய நகரங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2021 உலக காற்று தர அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 6,475 நகரங்களில் நடத்தப்பட்ட மாசு தரவுகளின் ஆய்வில், 2021 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த காற்றின் தரத்தை ஒரு நாடு கூட பூர்த்தி செய்யவில்லை என்பதையே இந்த தரவுகள் காட்டுகின்றன. 


நியூ கலிடோனியா, யுஎஸ் விர்ஜின் தீவுகள் மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவின் பிரதேசங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்ட WHO PM2.5 என்ற அளவிலான காற்றின் தர வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | China Plane Crash: தலைக்குப்புற விழுந்த விமானம்! வெளியான கடைசி நிமிட வீடியோ!


உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் பங்களாதேஷ் முதலிடத்திலும், சாட் இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலகிலேயே அதிக மாசுபட்ட நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.


காற்றின் தரத்தை கண்காணிக்கும் சுவிஸ் மாசு தொழில்நுட்ப நிறுவனமான IQAir தொகுத்த தரவுகளில், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நகரங்களில் 3.4% நகரங்கள் மட்டுமே, 2021 ஆம் ஆண்டில் காற்றின் தரத்தை எட்டியுள்ளன என கூறப்பட்டுள்ளது. 93 நகரங்களில் PM2.5 அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக இருந்தது எனவும் தரவுகள் கூறுகின்றன.


2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த மாசு அளவு மோசமடைந்தது என்றும், புது டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரமாக உள்ளது என்று தரவு காட்டுகிறது. முந்தைய ஆண்டை போலவே, பங்களாதேஷ் மிகவும் மாசுபட்ட நாடாக இருந்தது. அதே சமயம் சாட் ஆப்பிரிக்க நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்தது.


2014 ஆம் ஆண்டு முதல் மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் சீனா, அதன் பலனாக, 2021 ஆம் ஆண்டில் PM2.5 தரவரிசையில் 22 வது இடத்தில் உள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு 14 வது இடத்தில் இருந்து. சராசரி அளவீடுகள் வருடத்தில் 32.6 மைக்ரோகிராம் வரை சற்று மேம்பட்டுள்ளது என IQAir தெரிவித்துள்ளது.


ஜின்ஜியாங்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஹோட்டன், சீனாவின் மிக அதிக மாசுபாடு கொண்ட நகரமாக உள்ளது. இந்த இந்தியாவில் உள்ள பிவாடி மற்றும் காசியாபாத் ஆகிய இரண்டு நகரங்களையும் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் உள்ளது.


மேலும் படிக்க | இவையே மிகவும் மலிவான 5 அட்வென்ச்சர் பைக்குகள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR