டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய விதிமுறைகள்!!
நாடு முழுவதும் பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.
நாடு முழுவதும் பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.
இதன் மூலம் ஓட்டுனர் அல்லது வாகன உரிமையாளர் குறித்த முழுத் தகவல்களும் இடம்பெற்றிருக்கும். 10 ஆண்டுகள் வரையிலான ஓட்டுநர் அல்லது வாகன உரிமையாளரின் அபராதங்கள் உள்ளிட்ட முழு வரலாறும் தெரியவரும்.
அந்த வகையில் ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை காகித வடிவத்தில் வழங்குவதை கைவிட்டு விட்டு, நாடு முழுவதும் அவற்றை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் அட்டையின் தரத்தையும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அட்டையின் பின்புறத்தில் அவசர உதவி எண் வழங்கப்பட உள்ளது.