பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கிய திருவாடுதுறை ஆதீனம்...!
புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: டெல்லி வந்த பல ஆதீன குருமார்கள், பிரதமர் நரேந்திர மோடியிடம் சனிக்கிழமை (மே 27) செங்கோலை ஒப்படைத்தனர்.
இன்று அதிகாலை சென்னையில் இருந்து டெல்லி வந்த பல ஆதீன குருமார்கள், பிரதமர் நரேந்திர மோடியிடம் சனிக்கிழமை (மே 27) செங்கோலை ஒப்படைத்தனர். ஞாயிற்றுக்கிழமை (மே 28) புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே செங்கோல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆதீன குருமார்கள் இன்று மாலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர். புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நாளை காலை 8:30-9 மணிக்குள் செங்கோல் நிறுவப்படும்.
முன்னதாக, புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் இன்று தில்லிக்கு கொண்டுவரப்பட்டது. பிரயாக்ராஜில் முக்கூடலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின் தனி விமானத்தில் தில்லிக்குக் கொண்டு வரப்பட்டது. தில்லிக்கு கொண்டு வரப்பட்ட பின் செங்கோல் மத்திய கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செங்கோல் என்பது இந்தியாவின் சுதந்திர தினத்தன்று முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. செங்கோல் அலகாபாத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இவ்வளவு காலங்கள் கிடந்தது என மத்திய அரசு கூறுகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ''புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக''வும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். ''இந்த செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாடுதுறை ஆதினம் வழங்கிய செங்கோல் எனவும், இது நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை முன் நிறுவப்பட உள்ளதாகவும்' அமித்ஷா கூறியிருந்தார்.
செங்கோல் பிஜேபி மற்றும் காங்கிரஸுக்கு இடையே வார்த்தைப் போர். ஏற்பட்டது. மேலும் காங்கிரஸ் தங்க செங்கோலை ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியர்களுக்கு "அதிகாரத்தை மாற்றுவதற்கான" அடையாளமாக இருக்கவில்லை என மறுத்தனர். செங்கோலை கைத்தடி என்று காங்கிரஸ் கூறிய நிலையில், ஜனநாயகத்தைப் பற்றி காந்தி குடும்பம் என்ன நினைக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று ஸ்மிருதி இரானி கூறினார்.
மேலும் படிக்க - புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா... 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு..!
ஞாயிற்றுக்கிழமை புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25 கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தான் திறக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கூறி வந்தன. திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவதால், 20 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் கிட்டத்தட்ட முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீசக்ரத்தில் உள்ள மையம், மூல பிந்து முக்கோண வடிவம் என்பதை நினைவில் கொள்ளலாம். மேலும், பிரம்ம முகூர்த்தத்தில் வேதங்கள் முழங்க யாக வேள்விகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இந்த பொறுப்பினை சிருங்கேரி சாரதா பீடத்தை சார்ந்த மடத்தவர் வசம் ஒப்படைத்திருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாடாளுமன்ற புதிய கட்டடம் திறந்து வைக்கப்படும் நாள், விநாயக் தாமோதர் சாவர்க்கரின் 140வது பிறந்த ஆண்டு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் இறுதிச் சடங்கும் மே 28ம் தேதியன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ₹75 நினைவு நாணயம் வெளியீடு! நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்புவிழா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ