புது டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிய ரூ .100 நோட்டுகளை வெளியிடவுள்ளது. இது குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புதிய ரூ .100 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடுவதற்கு சில காரணங்கள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் முக்கியமான ஒரு காரணம் என்னவென்றால், புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ரூ .100 நோட்டின் ஆயுட்கலாம் அதிகமாக இருக்கும். இதை எளிதில் அழிக்க, அதாவது கிழிக்கவோ கட் செய்யவோ முடியாது. இந்த செய்திகளை ரிசர்வ்  வங்கி (RBI) தனது ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது.


இந்த புதிய ரூபாய் நோட்டின் தோற்றம் தற்போதைய ரூ .100 நோட்டுக்கு ஒத்ததாக இருக்கும். ஆனால் அதில் ஒரு சிறப்பு அம்சம் இருக்கும். இந்த சிறப்பு அம்சத்தின் காரணமாக, அதை எந்த வழியில் வேண்டுமானாலும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். 


ரிசர்வ் வங்கி 1 பில்லியன் ரூ .100 நோட்டுகளை அச்சிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் நீட்டிப்புத்தன்மைக்காக இந்த நோட்டுக்களில் (Currency) வார்னிஷ் பூசப்பட்டிருக்கும். மத்திய வங்கி தற்போது கள சோதனை ஓட்டத்தை நடத்தி வருகிறது. இந்த சோதனை வெற்றிகரமாக இருந்தால், ரிசர்வ் வங்கி இந்த புதிய ரூ.100 நோட்டுகளை அறிமுகப்படுத்தி படிப்படியாக பழைய ரூ .100 நோட்டுகளை அகற்றும்.


புதிய ரூ .100 நோட்டின் வார்னிஷ் பூச்சு பற்றி, ரிசர்வ் வங்கி தனது ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நீர், வெப்பநிலை மற்றும் பூச்சிகளிலிருந்து பாதுகாக்க மர தளபாடங்களில் வார்னிஷ் பூச்சு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், வங்கி இந்த ரூபாய் நோட்டுகளின் நிறத்தை மாற்றவில்லை.  இவற்றை தற்போதிருக்கும் ஊதா நிறத்திலேயே அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.


ALSO READ: பொருளாதார தடுப்பூசி: பல வித கோவிட் நிவாரணங்களை அறிவித்தார் RBI கவர்னர் ஷக்திகாந்த தாஸ்


இது குறித்து மத்திய அரசு (Central Government) ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மாநில நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் கடந்த ஆண்டு இதைப் பற்றி மேல் சபையில் குறிப்பிட்டுள்ளார். வார்னிஷ் பூசப்பட்ட ரூ .100 நோட்டுகளை அறிமுகம் செய்ய அரசாங்கம் ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த புதிய நோட்டின் மற்ற அம்சங்கள் பின்வருமாறு: 
அளவு: பழைய நோட்டுகளை ஒத்திருக்கும்
இது காந்தி தொடரில் இருக்கும்
வடிவமைப்பு: பழைய நோட்டுகளை ஒத்திருக்கும்
ஆயுள்: பழைய நோட்டுகளை ஒப்பிடும்போது நீண்ட ஆயுள்.
தற்போதைய ரூ .100 நோட்டின் ஆயுள் 2.5-3 ஆண்டுகள் ஆகும். ஆனால் வார்னிஷ் பூசப்பட்ட புதிய நோட்டுகள் குறைந்தது 7 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.


இருப்பினும், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் செலவு அதிகரிக்கும். இப்போது, ​​தற்போதைய ரூ .100 இன் 1000 நோட்டுகளை அச்சிடும் செலவு ரூ .1,570 ஆக உள்ளது. ஆனால் வார்னிஷ் பூசப்பட்ட நோட்டுகளுக்கு இது போல் 20 மடங்கு செலவாகும் என தெரிய வந்துள்ளது. மேலும், பார்வையவற்றவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மனதில் வைத்து இந்த புதிய நோட்டுகள் அவர்களுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


ALSO READ: 2000 ரூபாய் நோட்டு இன்னும் அச்சிடப்படுகிறதா.. மத்திய அரசு கூறியது என்ன..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR