கோவாவில், கடற்கரை பகுதிகளில் பார்ட்டிகளுக்கு செல்லவும் அல்லது உணவு விடுதிகளுக்கு செல்லவும் கோவிட் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்றுகளை வைத்திருக்கும் மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று  முதல்வர் பிரமோத் சாவந்த், கூறியுள்ளார். மேலும் பேசியவர் இன்று மாலைக்குள் இதுகுறித்த விரிவான அறிக்கை மாவட்டங்கள் தோறும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | மேக்கப் மூலம் ஷாருக்கானாக மாறிய பெண்! வைரலாகும் வீடியோ!


அதனையடுத்து கோவாவில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தினால், கிறிஸ்துமஸ் -புத்தாண்டு காலத்தில் நடைபெறும் வியாபாரங்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த  வேண்டாமென அரசு முடிவு செய்துள்ளது.  கோவிட் தொற்று கண்காணிக்கப்பட்டு வருகிறது, இவை அதிகரிக்கும் பட்சத்தில் ஜனவரி-3ம் தேதி நடைபெற இருக்கும் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.  இருப்பினும் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் கிட்டத்தட்ட 90 % பேர் கோவாவில் விடுதிகளில் தங்கியுள்ளனர், அதேபோல கடற்கரையிலும் மக்கள் அலைகடலென மகிழ்ச்சி வெள்ளத்தில் நிறைந்துள்ளனர்.  கோவிட் தொற்று நோய் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான சேவைகளும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.



இதனையடுத்து கோவாவின் டிராவல் அண்ட் டூரிஸம் அசோசியேஷன் ஆஃப் கோவா (TTAG) தலைவர் நிலேஷ் ஷா இதுகுறித்து கூறுகையில், 5 முதல் 7 % ஹோட்டல்களில் புக்கிங் செய்வது நிராகரிக்கப்பட்டு உள்ளது, இருப்பினும் இந்த காலம் நன்றாக உள்ளது.  வருடத்தின் இறுதி ஆண்டு எப்போதும் சுற்றுலா துறைக்கு ஒரு நல்ல நேரமாக அமையும்.  இப்போதே கோவாவில் 90% சுற்றுலா பயணிகள் விடுதிகளை ஆக்கிரமித்துள்ளனர், இவை இன்னும் புத்தாண்டுக்குள் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் அவர் கூறுகையில், நாங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறோம், வியாபாரிகளும் கோவிட் விதிமுறைகளை பின்பற்ற ஆரமபித்துவிட்டனர்.  மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவையின் மூலம் பல கலைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்று கூறினார்.


ALSO READ | ஒமிக்ரான் பரவல் காரணமாக பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணம் ஒத்திவைப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR