New COVID Vaccine: இந்தியாவில் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லாவுக்கு அனுமதி
மும்பையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சிப்லா, இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
Moderna in India: மும்பையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சிப்லா, இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 15 மற்றும் ஜூன் 1 தேதியிட்ட டி.சி.ஜி.ஐ அறிவிப்புகளைக் குறிப்பிட்டு திங்களன்று சிப்லா மாடர்னாவின் (Moderna) கோவிட் 19 தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை கோரி விண்ணப்பித்தது. தடுப்பூசியை EUA-வில் பயன்படுத்த USFDA அனுமதி அளித்திருந்தால், அந்த தடுப்பூசிக்கு மார்கெடிங்கிற்கான அனுமதி வழங்கப்படலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளின் முதல் 100 பயனாளிகளின் பாதுகாப்பு தரவின் மதிப்பீடு பொது மக்கள் நோய்த்தடுப்பு திட்டத்தில் தடுப்பூசி வெளிவருவதற்கு முன் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை, இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பூசிக்கு (COVID 19 Vaccine) விரைவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கக்கூடும் என்றும் எப்போது வேண்டுமானால் இந்த அங்கீகாரம் வழங்கப்படலாம் என்றும் பி.டி.ஐ ஆதாரங்களை மேற்கோள் காட்டி கூறியது. அதைத் தொடர்ந்து இந்த புதுப்பிப்பு வந்துள்ளது.
ALSO READ: Moderna-வின் ஒற்றை டோஸ் தடுப்பூசி: இந்தியாவில் கூடிய விரைவில் கிடைக்கும் 5 கோடி டோஸ்கள்
மேலும் சி.டி.எஸ்.சி.ஓ (CDSCO) மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லாவுக்கு அனுமதி வழங்குவதற்கு ஆதரவாக உள்ளதாகவும், இதற்கான ஒப்புதல் சிப்லாவுக்கு விரைவில் கிடைக்கக்கூடும் என்றும் வட்டாரங்கள் காலை தெரிவித்தன. தொற்று பரவல் இன்னும் கட்டுக்கடங்காத நிலையில், மக்கள் நலனுக்காகவும், தடுப்பூசிகளின் (Vaccines) தட்டுப்பட்டை குறைப்பதற்கும் இந்தியாவில் மாடர்னா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எம்.ஆர்.என்.ஏ -1273 என்ற மாடர்னா கோவிட் -19 தடுப்பூசி டோஸ்களை, கோவாக்ஸ் மூலம் இந்தியாவில் பயன்படுத்த இந்திய அரசுக்கு நன்கொடையாக அளிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது என்றும் இதற்கான ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது என்றும் மாடர்னா ஒரு தனி தகவல்தொடர்பு மூலம் தெரிவித்துள்ளது.
"இந்த கடிதமானது, அவசரமாக தேவைப்படும் இந்த தடுப்பூசிகளின் ஒப்புதலுக்காக ஒரு கோப்பைத் திறக்க CDSCO-விடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையாகும்" என்று மாடர்னா கூறியது.
ALSO READ: டெல்டா ப்ளஸ் வைரஸ், தடுப்பூசி செயல்திறனை குறைக்குமா; அரசு கூறுவது என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR