குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஆனந்திபென் பட்டேல், இன்று முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை குஜராத் மாநில கவர்னரிடம் ஒப்படைத்தார். அதனை பெற்றுக் கொண்ட கவர்னர் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் டில்லியில் பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 


இதைக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு:- குஜராத்தின் அடுத்த முதல்வராக அமித்ஷா நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமித்ஷா முதல்வராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கே இடமில்லை எனவும், குஜராத்தின் புதிய முதல்வரை அம்மாநில பா.ஜ. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் குஜராத் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய முதல்வர் குறித்து ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு பிறகே பா.ஜ., தலைமை முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.